பக்கங்கள்

பக்கங்கள்

9 டிச., 2015

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் பிற்போடப்படக்கூடிய சாத்தியம்


உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் பிற்போடப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லை நிர்ணயப் பணிகள் பூர்த்தியாகாத காரணத்தினால் இவ்வாறு உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாணசபைகள் ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2016ம் ஆண்டு மார்ச் மாதமளவில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் எல்லை நிர்ணயப் பணிகள் பூர்த்தியாகும் வரையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்