பக்கங்கள்

பக்கங்கள்

21 டிச., 2015

சென்னையில் விமான பணிப்பென் தூக்கிட்டு தற்கொலை: உயரதிகாரிகள் நெருக்கடி அளிப்பதாக கடிதம்



பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விமான பணிப்பெண் ஒருவர் உயரதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப்பைச் சேர்ந்த ரன்பிரீத் சிங் பால் (வயது 32) என்பவர் ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார். இவரது கணவர் அனுக் நாயர். இவரும் விமான பணியாளராக உள்ளார். இந்தநிலையில் நேற்று இரவு அவர், மீனம்பாக்கம் விமான நிலைய குடியிருப்பில் உள்ள தனது வீட்டில், உயரதிகாரிகள் தனக்கு நெருக்கடி கொடுப்பதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

அனுக் நாயர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கடிதத்தையும் கைப்பற்றினர். அனுக் நாயரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இருவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. திருமணம் ஆகி 7 ஆண்டுகள் நிறைவடையாததால் இந்த வழக்கை ஆர்.டி.ஓ. விசாரிக்க போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.