பக்கங்கள்

பக்கங்கள்

10 டிச., 2015

மட்டக்களப்பில்பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரி ஜனாதிபதிக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம்

 
 பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறினேசவிற்கு ஆயிரம் தபால் அட்டைகளை அனுப்பும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. 

சர்வதேச மனிதவுரிமைகள் தினமான இன்று மட்டக்களப்பின் பல பிரதேசங்களிலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரிய இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
”நல்லாட்சி அரசாங்கத்திற்கும் மனிதவுரிமைகள் சட்டத்திற்கும் எதிராகவுள்ள இந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனடியாக நீக்குங்கள்” என்ற வாசகங்களை குறித்த தபாலட்டையில் எழுதி ஜனாதிபதியின் முகவரியிடப்பட்டு குறித்த தபாலட்டைகள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற தபாலட்டைகள் அனுப்பும் போராட்டத்தை நாடுபூராகவும் உள்ள சிவில் சமூக பொது அமைப்புக்கள் முன்னெடுக்க வேண்டுமெனவும் போராட்டக் காரர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இந்த போராட்டத்தை கிழக்குப் பல்கலைகழக மாணவர் சமூகம்(கிழக்கின் அகல்) சமாச மற்றும் அமரா வலையமைப்புடன் இணைந்து விழுதுகள் இணையம் போன்ற அமைப்புக்கள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.