பக்கங்கள்

பக்கங்கள்

30 டிச., 2015

நாமல் ராஜபக்ச கொழும்பு குற்றத் தடுப்பு பொலிசில் ஆஜர்!


நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கொழும்பு குற்றத்தடுப்பு பொலிசில் ஆஜராகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் கொழும்பு குற்றத்தடுப்பு பொலிசார் விடுத்த அழைப்புக்கிணங்க அவர் ஆஜராகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
எனினும் எதற்காக வாக்குமூலம் என்பது குறித்து குற்றத்தடுப்பு பொலிசாரிடம் இருந்து தகவல்கள் எதையும் பெறமுடியவில்லை.
இப்போதைக்கு ஊடகங்களுக்கு தகவல் அளிப்பதற்கு அதிகாரம் இல்லை என்ற பதில் மட்டும் அவர்களிடமிருந்து கிடைத்துள்ளது.
இதற்கிடையே குற்றத்தடுப்பு பொலிசில் ஆஜராகியுள்ள நாமல் ராஜபக்சவின் வாக்குமூலம் தற்போது பதியப்பட்டுக் கொண்டிருப்பதாக இனம்காட்டிக் கொள்ள விரும்பாத அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.