பக்கங்கள்

பக்கங்கள்

29 டிச., 2015

பிரான்ஸில் இஸ்லாமிய தொழுகைக் கூடம் மீது தாக்குதல் (Photos, Video)

2F9C3D6800000578-3374498-image-a-3_1451120296586
பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான கார்ஸிகா தீவில், இஸ்லாமிய தொழுகைக் கூடம் ஒன்று ஆர்ப்பாட்டக்காரர்களால் அடித்து
நொறுக்கப்பட்டது.
கார்ஸிகா தீவின் தலைநகரம் அஜாக்கியோவில், தீயணைப்புப் படையினர் மீது ஒரு கும்பல் வியாழக்கிழமை இரவு தாக்குதல் நிகழ்த்தியது.
அந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு ஆதரவாகவும் சிலர் நேற்று ஆர்ப்பாட்டம் நிகழ்த்தினர்.
அப்போது அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், இஸ்லாமியத் தொழுகைக் கூடத்தின் கதவை உடைத்து, அங்கிருந்த பொருள்களை அடித்து நொறுக்கினர்.
இதையடுத்து, நகரிலுள்ள பிற இஸ்லாமியத் தொழுகைக் கூடங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து பிரான்ஸ் பிரதமர் மேனுவல் வால்ஸ் கூறுகையில், பொதுமக்கள் அனைவரும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். தீயணைப்புப் படையினர் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டது மிகவும் கண்டிக்கத் தக்கது. அதற்குப் பதிலடியாக, வழிபாட்டுக் கூடம் அடித்து நொறுக்கப்பட்டதும் ஏற்கத் தக்கதல்ல என்றார்.
2F9C32E200000578-3374498-image-a-2_1451120291178
2F9C325A00000578-3374498-image-a-1_1451120284814
2F9C325600000578-3374498-image-a-5_1451120303035
2F9C326100000578-3374498-image-a-4_1451120300680