பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜன., 2016

30 மணிநேரமாக தொடரும் சண்டை; தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் பாதுகாப்புப்படை தீவிரம்

பஞ்சாப் பதான்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ராணுவ உடையில் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 7
பாதுகாப்புப் படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 17 பாதுகாப்புப் படை வீரர்கள் படுகாயமடைந்தனர். இதுவரை 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல் வெளியாகியிருந்தது. எனினும் மாலை நேரத்திற்குள் இந்த சண்டை முடிந்துவிடும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், 30 மணிநேரத்திற்கும் மேலாக நடந்து வரும் சண்டை இன்னும் முடிவுக்கு வரவில்லை. பதான்கோட் விமானப்படைத் தளத்திற்குள் புகுந்துள்ள அனைத்து தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகே இந்த ஆபரேஷன் முடிவுக்கு கொண்டுவரப்படும் என ஏர் கமாடோர் ஜே.எஸ்.தாமூன் தெரிவித்துள்ளார்.