பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜன., 2016

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 40000 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு கற்பனைக் கதை– பரணகம

இறுதிக் கட்ட யுத்தத்தின் பேர்து 40,000 பொதுமக்கள் உயிரிழந்தனர் என கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் வெறும் கற்பனைக்
கதைகளே என காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விரிவான விசாரணகைள் நடத்தப்பட்டதாகவும் இவ்வாறு 40000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்க வாய்ப்பு கிடையாது எனவும் அவர்தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் யுத்த சூன்ய வலயமென்று ஒன்று இருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த சூன்ய வலயமொன்றை உருவாக்க தமிழீழ விடுதலைப் புலிகள் எப்போதும் இணங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகளின் அடிப்படையில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கப் படையினரிடம் சரணடைந்ததாகக் கூறப்படும் சில தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தற்போது வெளிநாட்டில் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பதவிக் காலத்தை மேலும் ஓர் ஆண்டிற்கு நீட்டிக்குமாறு ஆணைக்குழு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அரசாங்கம் சில வேளைகளில் ஆணைக்குழுவின் பதவிக் காலத்தை நீடிக்காது என தெரிவிக்கப்படுகிறது.