பக்கங்கள்

பக்கங்கள்

5 ஜன., 2016

629 ஓட்டங்களை நோக்கி தென் ஆபிரிக்கா

தென் ஆபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முதல்
இணிங்ஸின் 629 ஒட்டங்களை நோக்கி தென் ஆபிரிக்கா அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.  இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆபிரிக்கா அணி 141 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டினை இழந்து துடுப்பெடுத்தாடுகிறது. நேற்று முன் தினம் (சனிக்கிழமை) ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன் படி முதல் இணிங்ஸ்காக களமிறங்கிய இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 629 ஓட்டங்களை குவித்தது.
England-Vs-South-Africa-1
அணியின் அதிகபட்ச ஓட்டமாக பென் ஸ்டோக்ஸ் 258 ஓட்டங்களையும், பெரிஸ்டோவ் 150 ஒட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து தற்போது இங்கிலாந்து அணியின் முதல் இணிங்ஸின் 629 ஒட்டங்களை நோக்கி தென் ஆபிரிக்கா அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது. நேற்றைய ஆட்ட நேர முடிவில், அம்லா 64 ஓட்டங்களுடனும், டி வில்லியர்ஸ் 25 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.