பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜன., 2016

தமிழ் மக்கள் பேரவை இன்று கலைக்கப்பட உள்ளது

வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனின் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை இன்று கலைக்கப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் இந்த பேரவைக்கு எதிர்ப்பை வெளியிட்டதனால் இவ்வாறு பேரவை கலைக்கப்பட உள்ளது.
தமிழ் மக்கள் பேரவை கலைக்கப்படாவிட்டால் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என மாகாணசபை உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ் மக்கள் பேரவையை கலைப்பதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் இணங்கியுள்ளார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண சம்பந்தன் உள்ளிட்ட தலைவர்கள் தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வரும் நிலையில், அதனை சீர்குலைக்கும் நோக்கில் விக்னேஸ்வரனை சில சக்திகள் பயன்படுத்திக் கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
மாகாணசபை உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக தமிழ் மக்கள் பேரவை இன்று கலைக்கப்பட உள்ளது என சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது