பக்கங்கள்

பக்கங்கள்

13 ஜன., 2016

சிறந்த வீரரான மெஸ்ஸி வீராங்கனையாக கார்லி

1
சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனம் ஒவ்வொரு வருடமும் தனது சிறந்த வீர, வீராங்கனைகளைத் தெரிவுசெய்து அறிவித்து
வருகிறது. சிறந்த வீரருக்கான இறுதிப்பட்டியலில் ரொனால்டோ, மெஸ்ஸி, நெய்மர் மூவரும் இடம்பிடித்திருந்தனர். கால்பந்து பயிற்சியாளர்கள், பத்திரிகையாளர்கள், அணித்தலைவர் கொடுத்த வாக்குகளின் அடிப்படையில் ஆர்ஜென்ரீனா அணியின் தலைவரான மெஸ்ஸி சிறந்த வீரராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இந்த விருதை மெஸ்ஸி வெல்வது இத்துடன் ஐந்தாவது முறையாகும். சிறந்த வீராங்கனையாக அமெரிக்காவின் கார்லி லாயிடு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.