பக்கங்கள்

பக்கங்கள்

13 ஜன., 2016

கொலை,கற்பழிப்பு, ஆயுதங்கள் உதவியுடன் கொள்ளையடித்தல், போதை பொருட்கள் கடத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினரை சுவிட்சர்லாந்தில் இருந்து வெளியேற்றும் யோசனை-வலுக்கும் எதிர்ப்புகள்


விஸ் மக்கள் கட்சி முன்னெடுக்கும் முயற்சியால் ஆண்டுக்கு 18 ஆயிரம் வெளிநாட்டவர் வெளியேற்றப்படும் ஆபாயம் உள்ளதாக எதிர்க்கட்சிகள் எச்சரித்துள்ளன.
கொலை,கற்பழிப்பு, ஆயுதங்கள் உதவியுடன் கொள்ளையடித்தல், போதை பொருட்கள் கடத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினரை சுவிட்சர்லாந்தில் இருந்து வெளியேற்றும் யோசனையை சுவிஸ் மக்கள் கட்சி(SVP) முன்வைத்துள்ளது.
மேலும் இது தொடர்பாக பொதுமக்களின் கருத்தை அறியும் விதமாக பிப்ரவரி மாதம் 28ம் திகதி வாக்கெடுப்பையும் நடத்தவுள்ளது.
இந்நிலையில் SVPயின் இந்த திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக கிறிஸ்துவ ஜனநாயக கட்சியை சேர்ந்த பிலிப்பொ லொம்பார்டி கூறியதாவது, இந்த யோசனையின் மூலம் சுவிஸ் நாட்டில் பிறந்து வளர்ந்த வெளிநாட்டவர் வெளியேற்றப்படும் ஆபாயம் ஏற்படும்.
உதாரணமாக சுவிஸ் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர் ஒருவர் சுவிஸ் குடிமகனுடன் இணைந்து மது பாட்டில்களை திருடினார் என்றால் உடனடியாக நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்.
ஆனால் சுவிஸ் குடிமகன் வெறும் அபராதத்துடன் தப்பித்துக்கொள்வார். இவ்வாறு ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இதனால் ஆண்டுக்கு 18 ஆயிரம் வெளிநாட்டவர் வரை வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.