பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜன., 2016

அண்ணன் தோல்வியடைந்து ஒரு வருடம்: கறுப்பு பட்டி அணியும் கோத்தபாய

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நாளைய தினம் கறுப்பு கழுத்து பட்டியை அணிய போவதாக தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மேற்கொள்ளப்பட்ட பாரிய ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகி விட்டு வெளியில் வரும் போது ஊடகவியலாளர்களிடம் கோத்தபாய இதனை கூறியுள்ளார்.
கோத்தபாயவின் சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகும் நாளைய தினம் கறுப்பு கொடிகளை ஏற்றவும் கறுப்பு உடைகளை அணியும் கூட்டு எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறி்ப்பிடத்தக்கது.