பக்கங்கள்

பக்கங்கள்

3 ஜன., 2016

நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பக்கமே - சமல் ராஜபக்ச

நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பக்கமே என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நான் ஜனாதிபதியுடன் இணைந்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியிட வேண்டிய அவசியமில்லை.

தற்போதும் ஜனாதிபதியுடன் நான் ஒத்துழைப்புடனேயே செயற்பட்டு வருகின்றேன்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எவ்வித பிளவும் ஏற்படவில்லை.

கட்சியின் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதே எனது நோக்கமாகும் என சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.