பக்கங்கள்

பக்கங்கள்

30 ஜன., 2016

நிருபரைப்பார்த்து காரித்துப்பிய விஜயகாந்த் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் : ஐகோர்ட் உத்தரவு




சென்னையில் கடந்த டிசம்பர் 27-ம் தேதி ரத்த தானம் முகாமில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்,
  நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில், எதிர்கேள்வி கேட்டு காரித்துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் எழுந்தது. 

இந்நிலையில், விஜயகாந்த் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றும், வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும்  பத்திரிகையாளர் ஜி.தேவராஜன் சென்னை ஐகோர்ட்டில்  வழக்கு தொடர்ந்தார் .

இந்த வழக்கு குறித்த விசாரணை இன்று நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயகாந்த் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாக கூறிய நீதிபதி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இல்லை என்றால், இதுபற்றி புகார் தாரருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.