பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜன., 2016

தேசிய கீதம் பாடி டுவிட்டரில் இணைந்தார் நடிகர் கமல் ஹாசன்

குடியரசு தினமான இன்று சமூக வலைதளமான டுவிட்டரில் தன்னை இணைத்துக் கொண்டார் நடிகர் கமல் ஹாசன். (@ikamalhaasan)

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இசையில் அவரே பாடிய தேசிய கீதத்தை அவர் பதிவேற்றியுள்ளார்.  இந்திய விடுதலைப் போராட்டம் இன்றைக்கும் தனித்துவத்துடன் விளங்குகிறது என குறிப்பிட்டுள்ளார்.
கமல் ஹாசனின் வருகையை வரவேற்றுள்ள அவரது மகள் ஸ்ருதி ஹாசன், கமல் பாடிய தேசிய கீதத்தை மீண்டும் பதிவேற்றியுள்ளார்.
 

மேலும், அவர் டுவிட்டர் நிகழ்வுகளில் மகிழ்ச்சியான தருணங்களில் இன்று முக்கியமானதாகும். எனது மதிப்புமிக்க நபர் இன்று டுவிட்டரில் இணைந்துள்ளார். அவரை வரவேற்கிறேன். ஐ லவ் யூ அப்பா என்று குறிப்பிட்டுள்ளார்.
இரவு 7.30 மணியளவில் அவர் டுவிட்டரில் இணைந்த நிலையில், 8.30 மணிக்கு 10 ஆயிரம் பேர் அவரை பின்தொடர்ந்துள்ளனர்.