பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜன., 2016

புதிய அரசியல் அமைப்புக்குள் வட,கிழக்கை இணைக்க கூடாது! விகாரையில் நின்று இனவாதம் பேசிய மஹிந்த..


நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை தாம் வரவேற்பதாக முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று நாரஹன்பிட்டிய அபயராமய விஹாரைக்கு சென்றிருந்த அவர் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும் விடயத்தில் அரசாங்கம் நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் தாம் அரசியல் அமைப்பு மாற்றம் குறித்து குறிப்பிட்டிருந்ததாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

ஏற்கனவே 2011ஆம் இந்த விடயம் தொடர்பில் ஆராய நிமால் சிறிபால டி சில்வாவின் தலைமையிலான நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டதனையும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை 19வது அரசியல் அமைப்பின் கீழ் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. எனினும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் தொடர்ந்தும் நடைமுறையிலேயே உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் புதிய அரசியலமைப்பின் 13வது திருத்தத்தில் மேலதிக அதிகாரங்கள் வழங்கப்படக்கூடாது எனவும் வட, கிழக்கு மாகாணங்கள் இணைப்படக் கூடாது எனவும் மஹிந்த ராஜபக்ச கூறினார்.

13வது திருத்தத்தின் 9வது பந்தியில் உள்ள பொலிஸ் அதிகாரங்களை மாகாணசபைகள் நடைமுறைப்படுத்தினால் தேசிய பொலிஸ் படையை முடிவுக்கு கொண்டு வந்து 9 மாகாணங்களுக்கும் பொலிஸ் படையை தனித்து அமைக்கவேண்டி ஏற்படும்.

எனவே இந்த விடயம் இந்தியாவைப் போன்ற பெரிய நாடுகளுக்கு பொருத்தமாக இருக்கும். எனினும் இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு பொருத்தமற்றது எனவும் முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.