பக்கங்கள்

பக்கங்கள்

31 ஜன., 2016

அழகிரி குறித்த கேள்வி... கோபத்தில் மைக்கை தட்டிவிட்டுச் சென்ற கனிமொழி!

 பத்திரிகையாளர் சந்திப்பில், அழகிரி குறித்து கேட்கப்பட்ட கேள்வியால் கோபமடைந்த திமுக மாநிலங்களவை
உறுப்பினர் கனிமொழி, மைக்குகளை தட்டி விட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தி.மு.க. மகளிர் அணி சார்பில், அ.தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேடு, ஊழல், விலைவாசி உயர்வை கண்டித்தும், மதுவிலக்கை அமல்படுத்தக்கோரியும் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மகளிர் அணிச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, "பழ.கருப்பையா வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டனத் துக்குரியது. அ.தி.மு.க.விற்கு இது புதியதில்லை என்றாலும், எதிர்கருத்து கொண்டவர் என்பதற்காக தாக்குதல் நடத்துவது கண்டனத்துக்குரியது. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. தேவையான போது கூட்டணி குறித்து தலைவர்கள் முடிவு செய்வார்கள்," என்றார்.
அப்போது 'மு.க.அழகிரியின் பிறந்த நாளையொட்டி, அவர் மீண்டும் தி.மு.க.வில் இணைவார் என சொல்லப்படுகிறதே?' என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதற்கு பதிலளிக்க மறுத்த கனிமொழி, கோபத்தோடு செய்தியாளர்களின் மைக்குகளை தட்டிவிட்டு அங்கிருந்து விறுவிறுவென்று நகர்ந்தார்.

இதனால் பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.140 ஆண்டு கால சாதனை: ஆஸ்திரேலியாவை வொயிட் வாஷ் செய்த முதல் கேப்டன் தோனி