பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜன., 2016

தேசிய பொங்கல் விழாவில் பங்கேற்க விருப்பமில்லை! பங்கேற்றமைக்கான காரணம் கூறுகிறார் மாவை எம்.பி


தேசிய பொங்கல் விழா நிகழ்வில் கலந்து கொள்வதற்கு எமக்கு விருப்பமில்லை. ஆனால் பலாலி - கண்ணார்வயல் இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் பொங்கல் விழாவில் கலந்து நாங்கள் கலந்து கொண்டமைக்கு காரணம், எங்கள் நிலத்தை எங்களிடம் கொடுங்கள் எனக்கேட்பதற்கே.
மேற்கண்டவாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இன்று பலாலி- கண்ணார்வயல் இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் பொங்கல் விழா நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார்.