பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜன., 2016

தமிழகத்தில் மாற்றத்தைத் தர மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்: வைகோ

தமிழகத்தில் மாற்றத்தைத் தர மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்று மதிமுக பொதுச்செயலளார் வைகோ கூறியுள்ளார்.

மக்கள் நலக் கூட்டணி சார்பில் மாற்று அரசியல் எழுச்சி மாநாடு மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய வைகோ, தமிழகத்தில் திமுக அதிமுக ஆட்சிக் காலத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துவிட்டது. மணல் கொள்ளை, கிரானைட் முறைகேடு இரண்டு ஆட்சிக் காலத்திலும் நடந்தது. குற்றச் சம்பவங்களுக்கு மதுவே காரணமாக உள்ளது. மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால்தான் மதுவை ஒழிக்க முடியும். தமிழகத்தில் மாற்றத்தைத் தர மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்றார்