பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜன., 2016

கவிபேரரசு வைரமுத்து முல்லைத்தீவுக்கு வருகை தருகிறார்!

கவிபேரரசு வைரமுத்து அவர்கள் எதிர்வரும் 23 ம் திகதி முல்லைத்தீவில் இடம்பெறும் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் உழவர்
பெருவிழா நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சிறப்பு விருந்தினராக வருகை தருகிறார்.
எதிர்வரும் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மு/வித்தியானந்தா கல்லூரியில் , விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் மாகாண முதலமைச்சர் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர். இந்நிகழ்வில் கவிபேரரசும் கலந்துகொள்கிறார். தாயகத்தின் மீது அதீதபற்றுள்ள கவிபேரரசுவின் வருகையினால் பெருமளவு  ரசிகர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.