பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜன., 2016

சுவிட்சர்லாந்து மற்றும் தென்னாபிரிக்கா வடமாகாணசபை உறுப்பினர்களுக்கு கருத்தரங்கு



அரசாங்கம், புதியதொரு அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியிலிருக்கும் போது, சுவிட்சர்லாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் அரசியலமைப்பு அணியொன்று, வடமாகாணசபை உறுப்பினர்களுக்கு கருத்தரங்கினை நடாத்தியுள்ளனர்.
இக் கருத்தரங்கு இன்றைய தினம் காலை 10.30 மணிக்கு யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது.
பேராசிரியர் நவரத்ன பண்டார தலைமையிலான அரசியலமைப்புக் கற்கை நிறுவனமும், சுவிட்ஸர்லாந்தின் பிறிபோக் பல்கலைக்கழகமும் இணைந்து இந்தக் கருத்தரங்கை நடத்தினர்.  ‘அதிகாரப்பகிர்வு, அரசியலமைப்பு மாதிரிகள், பல்லின சமூகங்களில் சவால்கள் மற்றும் பார்வைகள்’ என்பது இந்தக் கருத்தரங்கின் கருப்பொருளாக அமையப் பெற்றன. இந்தக் கருத்தரங்கில், சுவிட்ஸர்லாந்து மற்றும் தென்னாபிரிக்க பல்கலைக்கழகங்களின் அரசியற்துறைப் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
அத்துடன் வடமாகாண சபையின் முதலமைச்சர், அவைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பங்கு பற்றினர்.