பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜன., 2016

ஞானசார தேரருக்கு சிறைச்சாலைக்குள் விடுதலை புலிகள் மற்றும் முஸ்லிம்களால் உயிருக்கு அச்சுறுத்தல்

எதிர்வரும் பெப்ரவரி ஒன்பதாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரருக்கு வெலிகடை சிறைச்சாலைக்குள் விஷேட பாதுகாப்பு கண்காணிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதர கைதிகள் மற்றும் சந்தேக நபர்கள் இல்லாத வேறு ஒரு இடம் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறைசாலை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
சிறைசாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலை புலிகள் சந்தேக நபர்கள் மற்றும் முஸ்லிம்களால் அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக வழங்கப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து அவருக்கு விஷேட பாதுகாப்பு கண்காணிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதர சந்தேக நபர்கள் தொடர்பில்லாத தனி இடம் சிறைச்சாலைக்குள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், சிறைச்சாலை மருத்துவமனைக்கு அவரை மாற்றுவதற்கு அதிகாரிகள் விரும்பியதாகவும், ஞானசார தேரர் அதனை மறுதலித்ததாகவும் சிங்கள மொழி இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.