பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜன., 2016

தெல்லிப்பழையில் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் குடும்பஸ்தர் பலி


யாழ்ப்பாணம் தெல்லிப்பழை, பட்டிக்கடவை பகுதியில் வீடு ஒன்றின் திருத்த பணிகளின் போது கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மாவிட்டபுரம் தெற்கு பட்டிகடவை கிராமத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கோபாலகிருஸ்னன் மயூரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவர்.
குறித்த பகுதியில் பழைய வீடொன்றை திருத்துவதற்காக வீட்டின் பின்பகுதியை இடித்துக் கொண்டிருக்கும் போதே வீட்டின் முன்பகுதியில் இருந்த சீமெந்து தட்டொன்று இடிந்து வீழ்ந்துள்ளது.
இதன்போதே இந்த இடிபாட்டிக்குள் சிக்குண்டு குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிந்துள்ளார்.
இதேவேளை இந்த சம்பவத்தையடுத்து வீட்டின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் சம்பவ இடத்திற்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி சென்று விசாரனைகளை மேற்கொண்டதையடுத்து சடலம் பிரதே பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.