பக்கங்கள்

பக்கங்கள்

24 ஜன., 2016

முகநூலில் மைத்திரியை முந்திய மஹிந்த

முகநூலில் இன்று தற்போதைய ஜனாதிபதியை மைத்திரிபாலவை விட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதிகம் விரும்பப்படும் ஒருவராக முன்னிலைக்கு வந்துள்ளார்.
இதன்படி 825,200 பேர் விருப்பம் வெளியிட்ட முதல் இலங்கை அரசியல்வாதி என்ற இடத்தை மஹிந்த ராஜபக்ச பெற்றுள்ளார்.
மைத்திரிபாலவின் முகநூலில் இன்று 825,183பேர் பதிவுகளை வெளியிட்டிருந்தனர்
எனினும் மஹிந்தவின் முகநூலில் 825,212பேர் தமது பதிவுகளை வெளியிட்டிருந்தனர்.
இதேவேளை நாமல் ராஜபக்சவின் முகநூலில் 687,000பேர் பதிவுகளை மேற்கொண்டனர்.
இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ரஞ்சன் ராமநாயக்கவின் முகநூலில் 420,000பேர் தமது பதிவுகளை மேற்கொண்டனர்.