பக்கங்கள்

பக்கங்கள்

30 ஜன., 2016

பிரித்தானியா மகா நாட்டில் சம்பந்தன் குழு பங்கேற்பு! ரவூப் ஹக்கீம் பயணம்

இலங்கையின் உத்தேச அரசியல் யாப்பு மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று பிரித்தானியாவின் எடின்பரா நகரில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இந்த கலந்துரையாடலில் இலங்கையில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவரும்  எதிர்க் கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கட்சியின் பிரதிச் செயலாளரும் கல்முனை மாநகர  முதல்வருமான எம்.நிஸாம் காரியப்பரும் பங்கேற்றுள்ளனர்.
இலங்கையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்பில் சிறுபான்மையினரின் உரிமைகள், அபிலாஷைகள் மற்றும் நலன்களை உறுதிப்படுத்துவது தொடர்பில் வலுவான  யோசனைகளை தயாரிப்பது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டு வருவதாக  தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இதன் தொடச்சியாக நாளை இடம்பெறவுள்ள இரண்டாம் கட்ட கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.