பக்கங்கள்

பக்கங்கள்

1 பிப்., 2016

கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் 13 உணவகங்களுக்கு எதிராக வழக்கு


கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் இயங்கி வந்த 13 உணவகங்கள் மீது கொழும்பு மாநகர சபையினர் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, உரிய அனுமதிப்பத்திரம் இன்றி புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையில் இயங்கி வந்த இந்த உணவகங்கள் மீதே வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த உணவகங்களை சோதனை செய்ய மாநகர சபை அதிகாரிகள் சென்ற வேளை அந்த உணவகங்கள் சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்டதாகவும் மாநகர சபையின் தலைமை உணவு பரிசோதகர் எம்.பீ.லால்குமார தெரிவித்துள்ளார்