பக்கங்கள்

பக்கங்கள்

3 பிப்., 2016

இலங்கை டாக்டர் குடும்பம் 17 வயது யுவதியுடன் அவுஸ்திரேலியாவில் தகாத உறவு அம்பலம்

dr.sl

கணவரை கொலை செய்தார் இலங்கையரான டாக்டர் சமரி லியனகே – அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் அரச தரப்பு சட்டத்தரணி வாதம்

அவுஸ்­தி­ரே­லி­யாவில் மருத்­து­வ­ரான தனது கண­வரை படுக்­கையில் வைத்து கொலை செய்த இலங்­கை­ய­ரான பெண் மருத்­துவர், தானும் தனது கண­வரும் யுவ­தி­யொ­ரு­வருடன் இணைந்து கூட்­டாக பாலியல் உறவில் ஈடு­பட்­டதை மறைப்­ப­தற்­கா­கவே இக்­ கொ­லையைச் செய்தார் என அவுஸ்தி­ரே­லிய நீதி­மன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
டாக்டர் சமரி லிய­னகே (35)எனும் இப் பெண், தனது கண­வ­ரான டாக்டர் தினேந்­திர அத்­து­கோ­ர­ளவை (34) 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொலை செய்­தா­ரெனக் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ளார்.
மேற்கு அவுஸ்­தி­ரே­லிய மாநில தலை­நகர் பேர்த்­துக்கு வடக்­கி­லுள்ள ஜெரால்ட்டன் நக­ரி­லுள்ள இத்­ தம்­ப­தியின் வீட்டில் மேற்­படி சம்­பவம் இடம்­பெற்­ற­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இது தொடர்­பான வழக்கு மேற்கு அவுஸ்­தி­ரே­லிய உயர் நீதி­மன்­றத்தில் நடை­பெ­று­கி­றது.
நேற்­று முன்­தினம் திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற வழக்கு விசா­ர­ணையில், அரச தரப்பு சட்­டத்­த­ர­ணி­யான நிக்கோகின் தனது வாதத்தை முன்­வைத்த­போது, “தினேந்­திர அத்­து­ கோரள அடிக்­கடி தனது மனைவி மற்றும் ஏனைய பெண்­க­ள் சகிதம் மூன்று பேராக இணைந்து பாலியல் உறவில் ஈடு­ப­டு­வ­தற்கு விரும்­பு­பவர்.
இதனால், இத்­ தம்­ப­தி­யினர் 17 வய­தான யுவ­தி­யொ­ரு­வ­ருடன் இணைந்து பாலியல் உறவை ஆரம்­பித்­தனர்” எனத் தெரிவித்தார்.
“டாக்டர் சமரி லிய­னகே, தனது கணவர் மற்றும் மேற்­படி 17 வயது யுவ­தி­யுடன் பாலியல் உறவில் ஈடு­பட்­டதன் பின்னர், இவ்­வி­டயம் குறித்து அவர் விச­ன­ம­டைந்­தி­ருந்தார்.
யுவ­தி­யொ­ரு­வ­ருடன் தானும் தனது கண­வரும் பாலியல் உறவில் ஈடு­பட்ட விட­யத்தை கணவர் அம்­ப­லப்­ப­டுத்­தினால் அது தனது தொழிற்சார் வாழ்க்­கைக்கு பெரும் பாதிப்­பாக அமையும் என சமரி லிய­னகே அச்சம் கொண்­டி­ருந்தார்.
இந்த அச்சம் கார­ண­மாக, சுத்­தியல் ஒன்­றினால் கணவர் தினேந்­திர அத்­து­கோ­ர­ளவை சமரி லிய­னகே தாக்கி கொலை செய்­தா­ரென சட்டத்­த­ரணி நிக் கோகின் நீதிமன்றில் கூறினார்.
2014 ஜூன் மாத்தில் ஒருநாள் அதிகாலை வேளையில் சமரி லிய­னேயின் தொலை­பேசி அழைப்பு கிடைத்­த­தா­கவும் அதி­காலை 6.18 மணி­ய­ளவில் பொலிஸார் அவ்­ வீட்டை சென்­ற­டைந்­த­தா­கவும் நீதி­மன்றில் தெரி­விக்­கப்­பட்­டது.
மெத்தையில் இரத்தம் வழிந்­தோ­டிய நிலையில், தினேந்­திர லிய­னேயின் சட­லத்தை பொலிஸார் கண்­டனர்.
அவ்­ வீட்டை அடைந்த முதல் பொலிஸ் குழுவில் இடம்­பெற்­றி­ருந்த அதி­கா­ரி­யான மெத்­தியூகேர்லி சாட்­சி­ய­ம­ளிக்­கையில், “என்ன நடந்­தது என நான் (சமரி லிய­ன­கே­யிடம்) கேட்டேன். தனக்கு எதுவும் தெரி­ய­வில்லை என அவர் பதி­ல­ளித்தார்” என்றார்.
கட்­டி­லுக்கு அருகில் சுத்­தியல் ஒன்றை தான் கண்­ட­தா­கவும் அப் பொலிஸ் அதி­காரி கூறினார்.
மேற்­படி சுத்­தியல் 1.79 கிலோ­கிராம் எடை­யு­ட­டை­யது என நீதிமன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
பிர­தி­வா­தி­யான டாக்டர் சமரி லிய­ன­கேயின் சட்­ட­த்­தரணி வாதிடு­கையில், தனது கட்­சிக்­காரர், துன்­பு­றுத்­தப்­பட்­டு உறக்­க­மற்ற துயரம் கொண்ட நெருக்­க­டியில் சிக்­கிய ஒரு பெண் எனத் தெரி­வித்தார்.
“அவரின் கணவருக்காக கெமராவுக்கு முன்னால் ஒரு மொடல் போன்று செயற்பட வேண்டியிருந்தது. சிலவேளைகளில் பல மணித்தியாலங்கள் இது நீடித்தது” என்றார்.
தனது கணவரை கொலை செய்தமை தொடர்பான குற்றச்சாட்டை டாக்டர் சமரி லியனகே நிராகரித்துள்ளார். இவ் வழக்கு விசாரணை தொடர்கிறது.dr.sl01