பக்கங்கள்

பக்கங்கள்

2 பிப்., 2016

மோடி வருகைக்கு எதிர்ப்பு - கருப்பு கொடி 200 பேர் கைது



கோவையில் E.S.I மருத்துவமனை திறப்பு  விழா, பொதுக்கூட்ட மேடையில் உரையாற்ற  வரும் மோடியின் வருகையை எதிர்த்து தந்தை பெரியார் திராவிடக் கழகம் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் திரண்ட 25 இயக்கங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் அவினாசி சாலை லட்சுமி மில் சந்திப்பில் நின்று ஐதராபாத் மாணவன் தற்கொலைக்கு காரணமான மோடியே திரும்பி போ...மாணவனின் மரணத்திற்கு காரணமான மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணியை கைது செய் ...தொடர்ந்து தலித் மக்களுக்கு எதிராக செயல்படும் மோடியே ..திரும்பி போ ..என கருப்பு கொடியோடு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர் .

இதனால் பரபரப்பாகி விட்ட போலீசார் .ஆர்ப்பாட்டம் செய்தவர்களை கைது செய்த போலீசார் ...அவினாசி சாலையில் உள்ள லட்சுமி கல்யாண மண்டபத்தில் அடைத்தனர் .