பக்கங்கள்

பக்கங்கள்

18 பிப்., 2016

பிப்ரவரி 24 முதல் அரசுப் பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு இலவச பயணம்



 அரசுப் பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு இலவச பயணத்திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். இத்திட்டம் சென்னையில் பிப்ரவரி 24-ம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் படிப்படியாக மூத்த குடிமக்களுக்கு இலவச பயணம் அமலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டோர் மூத்தகுடிமக்களாக கருதப்பட்டு இலவச பயணசலுகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலவச பயணத்திட்டத்துக்கு ஆன்லைனில் மூத்தகுடிமக்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச பயணத்தி்ட்டத்தின் கீழ் மாதத்துக்கு 10 டோக்கன்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். டோக்கன்களை நடத்துனரிம் கொடுத்து குறிப்பிட்ட வழித்தடத்தில் பயணம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.