பக்கங்கள்

பக்கங்கள்

14 பிப்., 2016

26 வருடங்களின் பின்னர் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் சென்ற மயிலிட்டி மக்கள்

உயர் பாதுகாப்பு வலயத்தில் இருக்கின்ற மயிலிட்டி குளத்து கண்ணகி அம்மன் ஆலயம் மற்றும் சென் றோசாரி தேவாலயம் ஆகியவற்றுக்கு 26 வருடங்களின் பின்னர் மக்கள் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுடன் அங்கு சென்ற மக்கள், தங்கள் பூர்வீக இடங்களை பார்வையிட்டனர்
இதன்போது மயிலிட்டி குளத்து கண்ணகி அம்மன் ஆலயத்திலும் மற்றும் சென் றோசாரி தேவாலயத்திலும் நடை பெற்ற விசேட பூஜை ஆராதனையிலும் கலந்து கொண்டார்.