பக்கங்கள்

பக்கங்கள்

10 பிப்., 2016

சென்னையில் தாறுமாறாக ஓடிய கார்... 2 பேர் பலியான பரிதாபம்

சென்னையில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் இருவர் பலியாகினர்.
சென்னை திருவான்மியூரை சேர்ந்த வெங்கடேஷ், ஒரு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். வழக்கம்
போல இன்று தனது காரில் வங்கிக்கு பணிக்கு புறப்பட்டார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடத் தொடங்கியது. இதில் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறியது. 

இந்த சம்பவத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்கள்.  பியாரிலால் மற்றும் அப்துல் ரஹீம் ஆகியோர் இறந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.