பக்கங்கள்

பக்கங்கள்

22 பிப்., 2016

முட்டுக்காட்டில் 3 பேருந்துகள் பயங்கர மோதல்: ஓட்டுநர் பலி- 31 பயணிகள் படுகாயம்!

முசென்னை முட்டுக்காடு அருகே மூன்று அரசு பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் ஒரு பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 31 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.


சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் அரசு பேருந்து ஒன்று முட்டுக்காடு படகு முகாம் அருகில் வந்தபோது புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு வந்த அரசு பேருந்து நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்திலும் பின்னார் வந்து கொண்டிருந்த அரசு பேருந்தும் மோதியது.


இந்த விபத்திலா் ஒரு பேருந்தின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார். 31 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து கானத்தூர் காவல்துறையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஈசிஆர் சாலையில் நடந்த பயங்கர விபத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.