பக்கங்கள்

பக்கங்கள்

4 பிப்., 2016

பெப்ரவரி 4 சுதந்திரதினம் அல்ல துக்கதினம்

பெப்ரவரி 4. 1948 அன்று பிரித்தானிய அரசாங்கம் இலங்கையை விட்டு வெளியேறியது. இந்நாளே சிங்களவர்களால் இலங்கையின்
சுதந்திர தினமாக ஆண்டுதோறும் வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஆனால் தமிழர்களாகிய எமக்கு இந்நாள் சுதந்திரநாளா? பிரித்தானிய அரசாங்கம் இலங்கையை விட்டு வெளியேறிய நாளிலிருந்து ஆரம்பமான தமிழர்கள் மீதான அடக்குமுறைகளும் இன அழிப்புகளும் இன்றுவரை தொடர்ந்த வண்ணமுள்ளன. ஆகாவே இந்நாள் தமிழர்களின் வாழ்வில் ஒரு துக்கதினமாகவே கருதப்படவேண்டிய நாளாகும்.
எனவே நாம் பெப்ரவரி 4ஆம் நாளை துக்கதினமாக நினைவுகூருவதோடு நின்றுவிடாமல், தம் நாட்டில் வாழும் அனைத்து இனங்களுக்கும் சமவுரிமை வழங்காத ஒரு நாட்டை, தமிழ் இனத்தை இன்னும் அழித்துக் கொண்டிருக்கும் ஒரு நாட்டை சர்வதேசம் சுதந்திரம் அடைந்த ஒரு நாடாகக் கருதமுடியாது என்பதையும் வலியுறுத்தி நிற்கவேண்டியது எமது தார்மீக கடமையாகும்.
தமிழர்களின் கோரிக்கையான தனித் தமிழீழம் அமையும் நாளே தமிழர்களால் சுதந்திரதினமாக கருதப்படும் என்பதே தமிழர்களின் ஒருமித்த கருத்தாக உலகெங்கும் பதிவு செய்யப்படவேண்டும்