பக்கங்கள்

பக்கங்கள்

2 பிப்., 2016

முதல்–அமைச்சர் ஜெயலலிதா மீதான பரிசுப் பொருள் வழக்கில் 5–ந் தேதி இறுதி விசாரணை


முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக சி.பி.ஐ. தொடர்ந்துள்ள பரிசுப் பொருள் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆண்டு
டிசம்பர் 17–ந் தேதி நீதிபதி சி.நாகப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஆனால் அவர் இந்த வழக்கை விசாரிக்க மறுத்துவிட்டார். கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 5–ந் தேதி நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இறுதி விசாரணைக்கு வருகிறது.
இந்த அமர்வுதான் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கையும் விசாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.