பக்கங்கள்

பக்கங்கள்

24 பிப்., 2016

668 பேருக்கு ஜெ. உருவத்தை பச்சை குத்தும் நிகழ்ச்சி: சாப்பாட்டுடன் பிரமாண்டப்படுத்தும் அமைச்சர்கள்!

முதல்வரின் மனதை குளிர வைக்க  வேண்டுமென்பதில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்களுக்குள் பெரும் போட்டா போட்டியே நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் முதல்வரின் பிறந்தநாளையொட்டி இன்று , வேளச்சேரி முருகன் திருமண மண்டபத்தில்,  668 பேரின் வலது கையில் முதல்வர் உருவத்தை பச்சை குத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியை அமைச்சர்கள் ஓ.பி.எஸ், நத்தம் விசுவநாதன், பழனிச்சாமி, வைத்திலிங்கம், வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர். அமைச்சர்களின் வருகைக்காக பச்சை குத்துபவர்கள் காத்திருக்கின்றனர்.