பக்கங்கள்

பக்கங்கள்

20 பிப்., 2016

தொடரும் கெடுபிடிகளால் திணறும் மஹிந்த! அரசியலிருந்து ஓட ஆயத்தம்

கடந்த அரசாங்கத்தின் போது ராஜபக்ஷ குடும்பத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மோசடிகள் மற்றும் கொலைகள் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நடவடிக்கையினால் நிலை குலைந்துள்ள ராஜபக்ஷ குடும்பம் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தனது குடும்பத்திற்கு எதிராக முன்னெடுக்கும் விசாரணைகளை இடை நிறுத்தினால் அரசியலிருந்து ஓய்வு பெறுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது குறித்து இரகசிய பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனது நிலைப்பாடு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக, இரகசிய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக மஹிந்த தலைமையிலான புதிய அரசியல் கட்சி ஒன்று தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் முக்கிய நோக்கமும் இந்த விசாரணை நடவடிக்கைகளை இடைநிறுத்தி கொள்வதற்கென தெரியவந்துள்ளது.
எனினும் எந்தவொரு காரணத்திற்காகவோ அழுத்தங்களுக்காவோ விசாரணைகளை இடைநிறுத்த ஜனாதிபதி மைத்திரி இணக்கம் தெரிவிக்கவில்லை..
கட்சி பிளவடைந்தாலும் அனைத்து விசாரணைகளும் சாதாரண முறையில் இடம்பெற வேண்டும் என நிலைப்பாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.