பக்கங்கள்

பக்கங்கள்

18 பிப்., 2016

போகுமிடமெல்லாம் கூட்டிச் செல்லப்படும் அவரது புதல்வர் தஹம் ! பொய்த்துப்போன மைத்திரியின் வாக்குறுதி

ஜனாதிபதியின் ஜேர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது அவரது புதல்வர் தஹம் சிறிசேனவும் உடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதற்கு முன்னர் ஜனாதிபதியின் ஐ.நா. பொதுச் சபை அமர்வுக்கான பயணத்தின் போது அரசாங்கத்தில் எந்தவித பதவிநிலையிலும் இல்லாத தஹம் உடன் கூட்டிச் செல்லப்பட்டிருந்தமை பெரும் எதிர்ப்பை உருவாக்கியிருந்தது.
அதற்குப் பதிலளித்திருந்த ஜனாதிபதி, தஹம் சிறிசேன ஐ.நா. இளைஞர் மாநாட்டின் அழைப்பின் பேரில் சென்றிருந்ததாகவும் தான் கூட்டிச் செல்லவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போதைய ஜேர்மனிக்கான விஜயத்தின் போதும் தஹம் சிறிசேன உடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனை சுயாதீன தகவல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நாமல் ராஜபக்ஷவை வெளிநாட்டுப் பயணங்களுக்கு அழைத்துச் சென்றமை குறித்து நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் தேர்தல் மேடைகளில் கடும் விமர்சனத்தை முன்வைத்திருந்தார்கள்.

அவ்வாறான அதிகார துஷ்பிரயோகங்களை மேற் கொள்ள மாட்டேன் என்ற வாக்குறுதியுடன் அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதி மைத்திரி, எதுவித அரசாங்கப் பதவியும் இல்லாத தன் மகனை பொதுமக்களின் வரிப்பணத்தில் தான் செல்லுமிடமெல்லாம் அழைத்துச்செல்லத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் நல்லாட்சி குறித்து அவர் பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடத் தொடங்கியுள்ளார்.