பக்கங்கள்

பக்கங்கள்

26 பிப்., 2016

ராஜபாளையம் வீடுகளில் கழிப்பறை கட்ட நடிகர் விஷால், நடிகை ஸ்ரீதிவ்யா நிதியுதவி



   ராஜபாளையத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து  நடிகர் விஷால் திறந்தவெளி கழிப்பறையை ஒழிப்பது குறித்து செவ்வாய்க்கிழமை இரவு ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

  கூட்டத்தில், நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி பேசுகையில், பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் நகரில் திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

  அப்போது, கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அளித்த ரூ. 3 லட்சத்து 28 ஆயிரத்தை நகராட்சி ஆணையாளர் தனலட்சுமியிடம் நடிகர் விஷால் வழங்கினார்.

  பின்னர் செய்தியாளர்களிடம் விஷால் கூறுகையில், இத் திட்டத்திற்கு நடிகை ஸ்ரீதிவ்யா ரூ.80 ஆயிரம் அளித்துள்ளார். இதுவரை சுமார் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் கழிப்பிடம் கட்ட நிதி சேர்ந்துள்ளது. அனைவரும் ஒத்துழைத்தால் சுமார் 200 கழிப்பறைகள் வரை கட்டுவதற்கான இலக்கை அடையலாம். கழிப்பறையின் அவசியத்தை கிராம மக்களுக்கு உணர்த்தும் விதமான நகராட்சியின் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அடுத்ததாக இணைவோம் என்றார்.