பக்கங்கள்

பக்கங்கள்

4 பிப்., 2016

மதுரை முத்து மனைவி கார் விபத்தில் மரணம்



பிரபல நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து.  இவரது மனைவி வையம்மாள் ( வயது 32 ).  இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உண்டு.  தற்போது நிகழ்ச்சி ஒன்றிற்காக கடந்த வாரம் அமெரிக்கா சென்றுள்ளார் மதுரை முத்து.  

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வையம்மாள் அதிகாலையில் காரில் சென்றார்.    அப்போது கார் திருப்பத்தூரில் சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே வையம்மாள் மரணம் அடைந்தார்.  பிரேத பரிசோதனைக்காக வையம்மாளின் உடல் திருப்பத்தூர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  கார் டிரைவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வையம்மாளின் மரணம் குறித்த தகவலை அமெரிக்காவில் இருக்கும் மதுரை முத்துவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவர் இன்று அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு சென்னை திரும்புகிறார்.