புங்குடுதீவில் வித்தியா இறந்த பின் பள்ளிக்கூடத்திற்கு பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்கு வெளிநாட்டு நண்பர்களின் உதவியினால் போக்குவரத்துச் சேவை நடைபெறுகிறது. பிள்ளைகள் பயமில்லாமல் போய்வருகிறார்கள். இவர்கள் சிறப்பாக படித்து நல்ல பிரஜைகளாக வந்தால்தான் இவ்விதவி செய்பவர்களுக்கு நீங்கள் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும். புங்குடுதீவைப் பொறுத்தமட்டில் கல்வி செயற்பாட்டுக்கு ஒரு நிறவனம் ஈடுபட்டால் நல்லது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொன்று செய்தால் திருப்திகரமாக இருக்கும். கல்விச்செயற்பாட்டில் உள்ளுர் வளவாளர்களை சேர்த்து கல்வி கற்பிப்பது. எதிர்கால நடவடிக்கைக்கு சிறந்தது.