பக்கங்கள்

பக்கங்கள்

28 பிப்., 2016

வவுனியா மைந்தனின் சர்வதேச சாதனை

தாய்லாந்தில் கடந்த இருபதாம் திகதி இடம்பெற்ற 100km மரதன் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட நான்கு பேர் கொண்ட
அணியில் பங்குபற்றிய, வவுனியாவினைச் சேர்ந்த நவநீதன் மற்றும் அவர் குழு வெள்ளிப் பதக்கத்தினைப் பெற்றுக் கொண்டது.
இலங்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இந்த அணியில் ஒரேயொரு தமிழ் வீரர் என்பது பெருமைக்குரிய விடயமாகும்.
இவர் வவுனியா “கண்போயிஸ்” விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினராவார்.
எதிர்காலத்தில் சர்வதேச ரீதியில் 100km மரதன் ஓடுவதே இலக்கு என நவநீதன் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் கனவு மெய்ப்பட வேண்டும் என vilaiyattu.com சார்பில் நாங்களும் வாழ்த்துகிறோம்
-நடராஜா கிருத்திகன்