பக்கங்கள்

பக்கங்கள்

21 பிப்., 2016

சமஷ்டி ஆட்சிமுறை உள்ள நாடுகள் பிரிந்து செல்லவில்லை : வடக்கு முதல்வர்

சமஷ்டி ஆட்சிமுறை நடைமுறையில் உள்ள நாடுகள் பிரிந்து செல்லவில்லை என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அரசியல்வாதிகளே சமஸ்டி என்றால் பிரிவினை என அர்த்தப்படுத்தி வந்துள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். 
 
கனடாவில் கியூபெக் என்று பிரஞ்சு மொழி பேசும் மக்கள் வாழும் பிரதேசம் உள்ளதாகவும் அவர்கள் கனடாவை விட்டு பிரிந்து செல்லவில்லை என்றும் வாக்கெடுப்பிலும் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 
 
இலங்கையில் சிறுபான்மை இன மக்களுக்கு உரிமையை கொடுத்தால் பிரிந்துவிடுவார்கள் என்றொரு கருத்து உள்ளதாக கூறிய அவர் சிறுபான்மை மக்களின் உரிமையை கொடுத்துப் பாருங்கள் அவர்கள் உங்களுடன் சேர்ந்திருப்பார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.