பக்கங்கள்

பக்கங்கள்

13 பிப்., 2016

யாழில் த.தே.கூட்டமைப்பை சந்தித்தார் மங்கள சமரவீர

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இன்று மாலை யாழ்ப்பாணம் மார்ட்டீன் வீதியிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், ஈ. சரவணபவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
நட்பு ரீதியான பல்வேறு விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனை செயலணியை அங்குரார்ப்பணம் செய்வதற்காக அமைச்சர் மங்கள சமரவீர யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.