பக்கங்கள்

பக்கங்கள்

5 பிப்., 2016

யாழிலிருந்து கொழும்பு சென்ற பஸ் சாவகச்சேரியில் இடைமறிப்பு (வழித்தட அனுமதி இல்லாததால்)



யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு புறப்பட்ட தனியார் பஸ் ஒன்று வழித்தட அனுமதிப்பத்திரம் இல்லாததால் சாவகச்சேரியில் வைத்து போக்குவரத்து பொலிஸாரால் இடைமறிப்புச் செய்யப்பட்டது.
இதனால் கொழும்புக்கு செல்லும் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். வழித்தடை அனுமதி இருப்பதாக கூறியே மேற்படி பஸ்ஸில் பயணிகள் ஏற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வழித்தடை அனுமதிப்பத்திரம் இல்லாததால் இடைமறிப்புச் செய்யப்பட்ட பஸ்ஸிலிருந்த பயணிகள் கொழும்பு செல்லும் இன்னொரு பஸ்ஸில் ஏற்றப்பட்ட போதிலும் ஏற்கெனவே செலுத்தப்பட்ட பஸ் கட்டணத்தை  திருப்பிக் கொடுப்பதில் தாமதமாக்கப்பட்டதால் பயணிகள் மேலும் சிரமமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.