பக்கங்கள்

பக்கங்கள்

29 பிப்., 2016

புங்கையின் புதிய ஒளி,சூழல் மேம்பாட்டுப் பிரிவினரின் அன்பான வேண்டுகோள்


புங்குடுதீவு வாழ் அன்பின் மக்கள் அனைவருக்கும் புங்கையின் புதிய ஒளி சூழல் மேம்பாட்டுப் பிரிவினரின் அன்பான வேண்டுகோள். புங்குடுதீவின் பசுமைப்புரட்சிக்கென தேர்ந்த திட்டம் ஒன்றினைக்
கையில் வைத்துள்ளோம். அத்திட்டம் அமுல்படுத்தப்படுவதற்குரிய ஆரம்ப செயற்பாடாக பல்லாயிரக்கணக்கான மரக்கன்றுகளை ஒரே இடத்தில் வைத்து மூன்றில் இருந்து நான்கு ஆண்டுகள் வரை பராமரித்து இலகுவாக வளர்த்தெடுக்கும் தேவைக்காக பெரும்தொகையான சேதனப்பசளைகளை சேகரிப்பதற்கான செயற்பாடுகள் விரைவில் அமுல்படுத்தப்பட உள்ளது. அதற்கு உதவியாக எனிவரும் காலங்களில் தயவு செய்து உக்கிப்பிரிகையடையக்கூடிய பிளாஸ்டிக், ரப்பர் உற்பத்தி தவிர்ந்த எந்தப் பொருட்களையும் (இலைகள், குப்பை கூழங்கள், மரம், தடி, கொடிகள், ஒலை , மட்டை) தீயிட்டு எரித்தழிக்காமல் தயவுசெய்து எம்மிடம் தந்து உதவும் படி மிகத்தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.
சேரும் குப்பைக்கூளங்களை ஓரிடத்தில் குவித்து வைத்து எமை அழைத்தால் நாம் நேரில் வந்து அவற்றை அகற்றிச் செல்வோம். தயவு செய்து தீயிட்டு எரிக்கக்கூடியவர்களைக் கண்டால் தயவுசெய்து தடுத்து நிறுத்தி எமது தேவைகளை எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தும் படி புங்குடுதீவு வாழ் சகல மக்களையும் கேட்டுக் கொள்கின்றோம்.
வெளினாட்டில் இருந்து விசேடமாக இறக்குமதி செய்யப்படும் இயந்திர சாதனங்கள் மூலம் சகல கழிவுகளும் தூளாக மாற்றப்பட்டு நாற்றுப் பைகளில் மண்ணிற்கு மாற்றீடாக பயன்படுத்தப்படும்.
மண்ணிற்குப் பதிலாக அவற்றைப் பிற்காலத்தில் பயன்படுத்தும் போது தாவரங்களின் வளர்ச்சி வேகத்தை அதிகரிக்க முடிவதுடன் நீர்சேமிப்பையும் அதிகரிக்க முடியும். அத்துடன்.
மண் பற்றாக்குறைக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும்.
மேலதிக விபரங்களுக்கு தயக்கம் இன்றி எம்முடன் தொடர்பு கொள்க:
விவேக் ராகுலன்
சூழல் மேம்பாட்டுப் பிரிவு தலைமை ஒருங்கிணைப்பாளர்.
புங்கையின் புதிய ஒளி.
தொ.பே. எண். 077 428 8525
வைபர் +94 77 428 8525