பக்கங்கள்

பக்கங்கள்

18 பிப்., 2016

நான் அப்படிச்சொல்லவில்லை; நான் அப்படிச்சொல்லவில்லை;


எனக்கு முகநூல் பயன்படுத்தும் பழக்கமே இல்லை: 


திமுக குறித்து பேச எனக்கு உரிமை இருக்கிறது என்று மு.க.அழகிரி தனது முகநூலில் கூறியிருப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.  ஆனால், அழகியோ தனக்கு முகநூல் பயன்படுத்தும் பழக்கே இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

அவர்,  ‘’எனது முகநூல் பக்கத்தில் சில கருத்துக்களை வெளியிட்டிருப்பதாக வந்துள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது.  முகநூல் பக்கத்தை பயன்படுத்தும் பழக்கம் எனக்கு கிடையாது.  நான் அப்படியொரு செய்தியை கொடுக்கவில்லை.’’ என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

அழகிரியின் மறுப்புக்கு காரணமான முந்தைய பதிவு:



திமுகவில் தென்மண்டல அமைப்பு செயலாளராக பொறுப்பு வகித்து வந்த மு.க.அழகிரி கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதன் பின்னரும் திமுகவை பற்றி அழகிரி தொடர்ந்து விமர்சனங்களை வைத்துக்கொண்டே இருக்கிறார்.  இதைத் தொடர்ந்து திமுக தலைவர் கலைஞர், தி.மு.க.வுக்கும் மு.க.அழகிரிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அவரது பேச்சுக்களை தி.மு.க.வினர் அலட்சியப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில், தனது முகநூல் பக்கத்தில் மு.க.அழகிரி கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அதில்,  ‘’தி.மு.க. பற்றி கருத்து சொல்ல நீ யார்? என்றும் என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது. இந்த கட்சிக்காக மற்றவர்களை விட நான் கூடுதலாகவே உழைத்துள்ளேன். பல முறை சிறை சென்றுள்ளேன். நான் தவறு செய்திருந்தால் அது கட்சிக்காக செய்த தவறாகவே இருக்கும்.

இது போன்று செயல்பட்டுத்தான் கட்சி மீது நான் பற்றுதலோடும், விசுவாசத்தோடும், இருந்துள்ளேன். எனவே கட்சியை பற்றி கவலைப்படவும், கட்சி தவறாக செல்லும்போது கேள்வி கேட்கவும் எனக்கு உரிமை உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.