பக்கங்கள்

பக்கங்கள்

17 பிப்., 2016

செயின்ட்பீட்டர்ஸ்பர்க் டென்னிஸ்: சானியா–ஹிங்கிஸ் ஜோடி ‘சாம்பியன்

செயின்ட்பீட்டர்ஸ்பர்க் சர்வதேச டென்னிஸ் போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் இரட்டையர்
இறுதிஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி 6–3, 6–1 என்ற நேர் செட் கணக்கில் 56 நிமிடங்களில் விரா டஷிவினா (ரஷியா), பார்போரா கிரெஜிகோவா (செக்குடியரசு) இணையை தோற்கடித்து பட்டத்தை தட்டிச் சென்றது.
உலக தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடம் வகிக்கும் சானியா – ஹிங்கிஸ் கூட்டணி தொடர்ச்சியாக பெற்ற 40–வது வெற்றி இதுவாகும். அத்துடன் இவர்கள் ஜோடியாக கைப்பற்றிய 13–வது பட்டம் இதுவாகும்.