பக்கங்கள்

பக்கங்கள்

8 பிப்., 2016

ஐ.நா ஆணையாளரை நாளை சந்திக்கிறது கூட்டமைப்பு

இலங்கை வந்துள்ள ஐ. நா ஆணையாளரை  நாளைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்திப்பானது  நாளை காலை கொழும்பில் நடைபெறும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது  அரசியல் கைதிகளின் விடுதலை, அரசியல் தீர்வு, ஜெனீவா பிரேரணையின் முழுமையான அமுலாக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில்  ஐ.நா ஆணையாளரோடு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.