பக்கங்கள்

பக்கங்கள்

21 பிப்., 2016

ஆயிரக்கணக்கான இலங்கை- இந்தியத் தமிழர்கள் சூழ விமர்சையாக இடம்பெற்றது கச்சதீவு திருவிழா


இலங்கை - கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இந்தியத் தமிழக தமிழ் மக்கள் மற்றும் இலங்கை தமிழ் மக்களின் ஒன்றிப்பில் இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் இருந்தும், யாழ்ப்பாணத்தில் இருந்தும் செல்லும் தமிழ் மக்கள் இணைந்து பாரம்பரியமாகவும், இரு நாட்டு உறவு களுக்கும் ஒரு இணைப்பு பாலமாகவும் அமையும் கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் இவ் ஆண்டும் பெருமளவான இரு நாட்டு தமிழர்களும் கலந்து கொண்டு வழிபட்டனர்.காலை 7 மணிக்கு யாழ்.மறைமாவட்ட ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் திருப்பலி ஒப்புக் கொடுத்தார்.
திருவிழாவில் இந்திய துணைத்தூதுவர் எஸ்.நட்ராஜ் மற்றும் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குறே, அமைச்சர் விஜயகலா, மற்றும் இரு நாட்டிலிருந்தும் வருகை தந்த கிறித்தவ பாதிரியார்களும் கலந்து கொண்டனர்