பக்கங்கள்

பக்கங்கள்

3 பிப்., 2016

சென்னை விமானநிலையத்தில் ரஜினி பாஸ்போர்ட் இல்லாமல் தவித்தார்? நடந்தது என்ன?

நேற்று சென்னை விமான நிலையத்திற்கு சென்ற  ரஜினி, கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) இல்லாமல் தவித்தார் என்று செய்திகள் வெளியாகின.
ஆனால் ரஜினி, கடவுச்சீட்டை மறந்துவிட்டு வந்தார் என்பது தவறு என்று ரஜினி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரஜினி எப்போது விமான நிலையம் செல்லும் போதும், அவருக்குத் தேவையான ஆவணங்களைக் கொண்டு செல்ல உதவியாளர்கள் உள்ளார்கள்.
அவர்கள் ரஜினி விமான நிலையம் வருவதற்கு முன்பு அங்கு சென்று விடுவார்கள்.
ஆனால் நேற்று அவர்கள் வருவதற்கு முன்பு ரஜினி விமான நிலையம் வந்துவிட்டார். அதனால் அவர் காத்திருக்க நேர்ந்தது என்று தகவல் தெரிவிக்கின்றன.
கபாலி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக ரஜினி நேற்று மலேசியா செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்ற போதே மேற்படி சம்பவம் நிகழ்ந்துள்ளது.